fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

முருங்கைக்கீரை பொரித்த குழம்பு

Drumstick tree leaves curry - முருங்கைக்கீரை பொரித்த குழம்பு

முருங்கைக்கீரை பொரித்த குழம்பு முருங்கைக்கீரை பொரித்த குழம்பு Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 200 calories 25 grams fat
Rating: 5.0/5
( 2 voted )

Ingredients

  • முருங்கைக்கீரை – 1 கட்டு
  • பாசிப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
  • தேங்காய் – சிறிதளவு
  • மிளகாய் வத்தல் – 4
  • மிளகு – சிறிதளவு
  • உளுந்தம் பருப்பு - சிறிதளவு
  • பெருங்காயம் – சிறிதளவு
  • எண்ணெய் – சிறிதளவு
  • மஞ்சள் பொடி – சிறிதளவு
  • தண்ணீர் – கொஞ்சம்
  • கடுகு - சிறிதளவு

Instructions

முதலில் முருங்கைக்கீரையை வேக வைத்து கொள்ளவும்.   பாசிப்பருப்பு, மஞ்சள் பொடி மற்றும் தண்ணீர் சேர்த்து குழைய வேக வைக்கவும். பிறகு  ஒரு கடாயில் எண்ணெய், மிளகாய் வத்தல், மிளகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். வறுத்ததை அரைத்துக் கொள்ளவும்.  பிறகு கீரை மற்றும் பருப்பை சேர்த்து அதோடு அரைத்த விழுதைச் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு, ஒரு கடாயில் எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு, மிளகாய் வத்தல் சேர்த்து, கொதித்ததில் ஊற்றினால் முருங்கைக்கீரை பொரித்த குழம்பு தயார்.

 

முருங்கைக்கீரை பொரித்த குழம்பு

முருங்கை கீரையை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் வந்தால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும். பற்களின் உறுதி, நீளமான முடியின் வளர்ச்சி, நரை முடி, தோல் நோய், வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய நோய்களுக்கு முருங்கைக்கீரை நல்ல மருந்தாக உதவுகிறது.

Related posts

குழந்தைகளுக்கான வேர்க்கடலை சாதம்!!

N N

டேஸ்ட்டியான கசகசா பட்டர் சிக்கன்!!

N N

சுவையான தயிர் சாதம்

N N