முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இரண்டாம் நாள் நினைவேந்தல் செம்மணியில் அனுஷ்டிப்பு (Photos)

13 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இரண்டாம் நாள் நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை(13.5.2022) முற்பகல்-10 மணிக்கு யாழ்.செம்மணியில் படுகொலை இடம்பெற்ற மண்ணில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு இரண்டு நிமிட அக வணக்கமும் செலுத்தப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)