யாழில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி(Photo)

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் முதல் நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று வியாழக்கிழமை(12.5.2022) பிற்பகல்-6.30 மணிக்கு யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபன் நினைவிடத்தில் தமிழ்த் தேசிப் பண்பாட்டுப் பேரவையால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் மற்றும் யுத்தத்தில் கொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்கு அஞ்சலிசெலுத்தினார்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)