தியாகதீபம் அன்னை பூபதி உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்த நாள் நேற்று(19) ஆகும். அதனையொட்டி தற்போதைய கொரோனா நிலையிலும், சுவிஸ் பேர்ன்(Bern) நகரில் வாழும் தமிழ் மக்களால் அன்னையின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
“மக்களைக் காப்பாற்றுவதற்காகத் தம் உயிரைத் தருகின்ற போராளிகளின் இலட்சியத்திற்காகத் தன் உயிரைத் தாரை வார்க்க முன்வந்த அன்னை பூபதியின் தியாகம் நாட்டுப்பற்றாளர்களின் தியாகத்திற்கும், அர்ப்பணிப்பிற்கும் ஒரு குறியீடாகும்.! அந்த வகையில் அன்னை பூபதியின் நினைவு தினம் என்பதானது நாட்டுப்பற்றாளர் தினம்” என்று தமிழீழத் தேசியத் தலைமையினால் பிரகடனப் படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.









