fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள்

தமிழகத்தில் ஒரேநாளில் 4000 க்கும் மேற்பட்டோர் கொரோனாத் தொற்றால் பாதிப்பு!!

கொரோனாத் தொற்றானது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கி ஏறக்குறைய ஓராண்டுகள் ஆகப் போகும் நிலையிலும் நிலைமை சீரானபாடில்லை. கொரோனாத் தொற்றுக்கு வல்லரசு நாடுகளும் பெரிய அளவில் பலியான நிலையில் இந்தியாவில் அதில் தப்பவில்லை.

உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியா மிகப் பெரும் அளவில் பாதிக்கப்படும் என நினைத்த நிலையில் இந்தியா மிகவும் கடுமையான விதிமுறைகளை விதித்து, இப்பெரும் தொற்றில் இருந்து மக்களைப் பெருமளவில் பாதுகாத்தது.

தமிழகத்தில் ஒரேநாளில் 4000 க்கும் மேற்பட்டோர் கொரோனாத் தொற்றால் பாதிப்பு!!

அந்த வகையில் தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் குறித்த தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதாவது தமிழகத்தில் இன்று 4 ஆயிரத்து 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையானது 6 லட்சத்து 83 ஆயிரத்து 486 ஆக உள்ளது.

மேலும் இன்று குணமாய் வீடு திரும்புவோர் 5 ஆயிரத்து 005 பேர் ஆவர், தற்போதுவரை தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் 6 லட்சத்து 32 ஆயிரத்து 708 ஆக உள்ளனர். மேலும் இன்று கொரோனா தாக்குதலால் உயிரிழந்தோர் 57 பேர் ஆவர்.

Related posts

3 கோடி போலி ரேசன் கார்டுகள் கண்டுபிடிப்பு!

World News

அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நிலவின் மேற்பரப்பில் சந்திரயான் 3 – இஸ்ரோ

World News

மே 22 ல் விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சி46

N N