கொரோனா வைரஸ் தொற்றானது 2019 ஆம் ஆண்டு சீனாவில் உருவானது.
சீனாவில் இருந்து ஒவ்வொரு நாடுகளுக்கும் பரவிய பெருந்தொற்றால் உலக அளவில் 1 கோடி பேர் பாதிக்கப்பட்டனர்.
கொரோனாத் தொற்றுக்கு எதிராக இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் கோவிஷீல்டு, கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் தடுப்பூசிகளே மற்றுமொரு வழியாக உள்ளன.
கொரோனா உருமாறி மீண்டும் இரண்டாம், மூன்றாம் அலைகளாக பரவியது. ஆல்பா, பீட்டா, காமா, கப்பா என பல பெயர்களும் உருமாறிய கொரோனாவிற்கு வைக்கப்பட்டது.
கொரோனா அலை ஓய்ந்தநிலையில் தற்போது மங்கிபாஸ் என்ற தொற்று உலகம் முழுவதும் பரவி வருகின்றது.
இந்தத் தொற்றானது ஐரோப்பிய நாடுகளில் பெரிய அளவில் பரவியுள்ளது, உலக அளவில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளைப் பாதித்துள்ள இந்த வைரஸ் நோயை குரங்கம்மை என்றும் அழைக்கின்றனர்.
உடலில் பெரிய கொப்பளங்கள் ஏற்படுத்துவதுதான் மங்கிபாஸ். இந்தியாவில் குரங்கம்மை வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு விமான நிலையங்கள் மற்றும் துறை முகங்களில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்த விழிப்புணர்வானது உலகம் முழுவதிலும் தற்போது ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போதுவரை 100 க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.