நடிகர் மோகன்லால் தமிழில் விஜய் உடன் ஜில்லா படத்தில் அவருக்கு தந்தையாக நடித்து இருந்தார். இப்பொழுது நடிகர் சூர்யா நடித்து வரும் காப்பான் திரைப்படத்தில் மோகன்லால் நடித்து வருகிறார். காப்பான் திரைப்படத்தினை இயக்குநர் கே. வி. ஆனந்த் இயக்குகிறார். கே. வி. ஆனந்த் மற்றும் சூர்யா இவர்கள் இருவரும் இணையும் மூன்றாவது படம் இது ஆகும். இப்படத்தில் மோகன்லால் பிரதமர் வேடத்தில் நடிக்கிறார். மோகன்லாலை பாதுகாக்கும் அதிகாரியாக சூர்யா நடித்து இருக்கிறார். சூர்யா ஜோடியாக இப்படத்தில் நடிகை சாயிஷா நடிக்கிறார்.

மலையாளத்தில் மோகன்லால் நடித்து உள்ள லூசிபர் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படத்தினை நடிகர் பிருத்திவி ராஜ் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர், தொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன், விவேக் ஓபராய் ஆகியோரும் நடித்து இருக்கின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இத்திரைப்படம் மே – 28 ரிலீஸாகிறது. இத்திரைப்படம் அரசியல் கலந்த திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கிறது.