fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள் செய்திகள்

பிரதமருக்குப் பதிலடி கொடுத்த காங்கிரஸ்

கன்னியாகுமரியில் 40 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பிரதமர் மோடியால் மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டன. தொடக்க விழாவில் மோடி இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தமிழகத்தை சார்ந்தவர், இத்தகைய பெருமைக்குரியது தமிழ்நாடு என்று தமிழகத்தைப்பற்றி நான் பெருமை கொள்கிறேன் என்று பேசினார் பிரதமர் மோடி.

இதனையொட்டி இந்திரா காந்தி நாட்டின் முதல் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆவார்.  நிர்மலா சீதாராமன் அல்ல என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியினர் நினைவூட்டும் விதமாக அவர்களின் இண்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டி ஒன்றை நடத்தினர். அந்த போட்டியின் பெயர் “இந்திய அரசியலில் பெண்களின் வரலாறு’. அந்தப் போட்டியில் 3 கேள்விகள் கேட்கப்பட்டன. 

பிரதமருக்குப் பதிலடி கொடுத்த காங்கிரஸ்

இந்தியாவின் முதல் பெண் பிரதமர் யார்? முதல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யார்? இந்திய மாநிலங்களில் முதல் பெண் முதலைமைச்சர் யார்?  இவையே அக்கேள்விகள்.

காங்கிரஸ் கடுமையான முறையில் தங்களுடைய பதிலை தெரிவித்திருந்தது. “உங்களின் கவனத்திற்கு, இந்திரா காந்தி தான் இந்தியாவின் முதல் பாதுகாப்பு துறை அமைச்சர் என்றும் இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராக இருந்த பொழுது 1980-82 வரை பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்துள்ளார் என்றும் கூறியுள்ளனர். ஒரு வேளை நீங்கள் அரசியல் அறிவியல் பகுதியை தவறவிட்டிருந்தால்  வரலாற்றை தூசி தட்டும் காலம் வந்து விட்டது.” எனப் பதிலடி கொடுத்திருந்தது.

Related posts

நாட்டில் வேலையற்றோர் வீதத்தில் அதிகரிப்பு

World News

கார்கில் வெற்றியின் 20 ஆம் ஆண்டு விழா!!!

N N

கொரோனாவுக்கு எதிரான போராட்டம்: தாமரைக் கோபுரத்தில் ஒளியேற்றி கௌரவிக்கும் நிகழ்வு

World News