fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர்!!
இந்தியச் செய்திகள்

பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர்!!

இந்தியா முழுவதும் அனைத்து மையங்களிலும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி வெற்றிபெற்றது குறித்து சுகாதாரத் துறை மகிழ்ச்சிகரமான தகவலை வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசியானது முதற்கட்டமாக போடப்படும் நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது கோவிஷீல்டு, கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகளை முன் களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், பாராமெடிக்கல் ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவல் துறையினர் ஆகியோருக்கு ஜனவரி 16 ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர்!!

தடுப்பூசி போட்டுக் கொண்ட சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டதால், இந்தநிலையிலும் தடுப்பூசி போட்டுக் கொள்ள பொதுமக்கள் தயங்கி வருகின்றனர். அதனால் கொரோனாவுக்கு எதிராகப் பயன்பாட்டிற்கு வந்துள்ள தடுப்பூசியினை மக்கள் போட்டுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகின்றது.

விழிப்புணர்வின் ஒரு கட்டமாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.

சுகாதாரத்துறை பணியாளர்கள் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்கிய நிலையில் அவர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் நம்பிக்கை ஏற்படுத்தும் நோக்கில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கரின் செயலுக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Related posts

பதவியேற்பு விழாவில் கலக்கிய லிட்டில் கெஜ்ரிவால் (Video)

World News

ராமர் கோயில் கட்டி முடிக்க 5 ஆண்டுகளாகும்!

World News

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி திட்டத்தை காணொலி வாயிலாக துவக்கி வைத்தார் பிரதமர் மோடி!!

TT Media