நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு சவால் விடுத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தன்மீது பொய்யான தகவல்களை வழங்கியதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சவால் விடுத்துள்ளார்.

வடக்கில் தொழிலில் ஈடுபடும் 500 இழுவை வலை படகுகளிடமிருந்தும் நான் ஒரு இரவுக்கு ஒரு படகிடமிருந்து 5000 ரூபா கப்பமாகப் பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது சிறப்புரிமையைப் பயன்படுத்தி சபையில் கூறியுள்ளார், அவர் முடியுமானால் இந்தக் கருத்தைப் பொதுவெளியில் ஊடகங்களுக்குச் சொல்ல முடியுமாவென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சவால் விடுத்தார்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டக் கடற்றொழில் அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு (07.12.2021) உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.