வரகை நன்கு தோல் நீக்கி சுத்தம் செய்யாவிட்டால் தொண்டையில் அடைத்துக்கொண்டு ஒருவிதமான ஒவ்வாமையை ஏற்படுத்தும். வரகு அரிசியானது விரைவில் செரிமானம் அடைவதோடு உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்.

சிறுதானியமான வரகு அரசியில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. வரகு அரிசி மலச்சிக்கலை போக்குகிறது. உடல் பருமனைக் குறைக்கிறது. மூட்டு வலியைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. வரகு அரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும். உடலுக்கு வலிமையை கொடுக்கும். வீக்கத்தைக் கரைக்கும். ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றும் தன்மை வரகு அரிசிக்கு உண்டு. மாதவிடாய் கோளாறுகள் நீங்கும். கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டும்; கண் நரம்புகளுக்கு ஏற்றது. எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை அளிக்கும் வல்லமை படைத்தது இந்த வரகு அரிசி.
முதலில் வரகு அரிசியை வறுத்துக் கொள்ளவும். பின் ஒரு கடாயில் எண்ணெய் சூடாகியதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து வெங்காயம் சேர்த்து பின் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, வதங்கியதும் தக்காளி, பச்சைமிளகாய், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, தயிர், புதினா, கொத்தமல்லித் தழை, நறுக்கிய காய்கறிகள் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். பின் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் வரகு அரிசியை சேர்த்து கிளறி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 1 கொதி வந்ததும் குக்கரை மூடி விசில் போட்டு 10 நிமிடத்திற்கு மூடி வைக்கவும். வெந்தவுடன் இறக்கி சிறிது நெய் சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்.
Ingredients
Instructions