fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள்

மெட்ரோ ரெயில் சேவை நேரம் அதிகரிப்பு

சென்னை பயணிகள் பஸ்ஸில் பயணிப்பதை விட பயணிகளின் மெட்ரோ ரெயிலில் அதிகமாகவே பயணம் செய்கிறார்கள் அவர்களின்  வசதிக்காக வரும் 2 வாரங்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

            சென்னையில், செயின்ட் தாமஸ் மவுண்ட் -கோயம்பேடு- சென்ட்ரல், விமான நிலையம் -சைதாப்பேட்டை -வண்ணாரப்பேட்டை  ஆகிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது.  அதன் படி அதிகாலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, மெட்ரோ ரயில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மெட்ரோ ரெயில் சேவை நேரம் அதிகரிப்பு

           இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், அதிகாலை 4.30 மணி, 5 மணி, 5.30 மணி, 6 மணி என அதிகாலையில் மட்டும் அரைமணி நேரத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும். அதன்பிறகு வழக்கம்போல் பீக் நேரங்களில் 7 நிமிடத்துக்கு ஒருமுறையும் மற்ற நேரங்களில் 14 நிமிடத்துக்கு ஒரு முறையும் மெட்ரோ சேவை இருக்கும். ரெயில் நேரம் அதிகரிப்பு மூலம் விமான நிலையத்துக்கு செல்லும் பயணிகளுக்கு உதவியாக இருக்கும்.

Related posts

அதிமுக பிரமுகருக்கும் கொரோனா தொற்று உறுதியானது

World News

திகார் சிறையில் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கான மாதிரி தூக்கு நடைமுறை!

World News

புதைவட மின்கம்பிகள் பொருத்தம்- மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி

N N