Thursday, December 1, 2022
HomeEvents-நிகழ்வுகள்யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பேராசிரியர். கைலாசநாதக் குருக்கள் ஞாபகார்த்த நினைவுப் பேருரை

யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பேராசிரியர். கைலாசநாதக் குருக்கள் ஞாபகார்த்த நினைவுப் பேருரை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துநாகரிகத் துறையின் முதலாவது தலைவரும், யாழ். பல்கலைக்கழகத்தால் முதன்முதலாக வாழ்நாள் பேராசிரியராக நியமிக்கப்பட்டவருமான இலக்கியகலாநிதி பேராசிரியர்.கா.கைலாசநாதக் குருக்களின் ஞாபகார்த்த நினைவுப் பேருரை நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை(15.11.2022) மாலை-3 மணி முதல் மேற்படி பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமஸ்கிருதத் துறையின் முன்னாள் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி.ம.பாலகைலாசநாதசர்மா கலந்து கொண்டு சம்ஸ்கிருத மொழி இலங்கையின் கிரியை மரபுகளில் எத்தகைய தாக்கத்தைச் செலுத்துகின்றது? என்பது தொடர்பான நினைவுப் பேருரையை ஆங்கில மொழியில் ஆற்றினார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடத்தின் புதிய பீடாதிபதி சர்வேஸ்வர ஐயர் பத்மநாபன் நன்றி உரை நிகழ்த்தினார்.

மேற்படி நினைவுப் பேருரை நிகழ்வில் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள், இலங்கை சர்வதேச இந்துக் குருமார் ஒன்றியத் தலைவரும், சைவசித்தாந்தப் பண்டிதருமான சிவஸ்ரீ து.கு.ஜெகதீஸ்வரக் குருக்கள், சுன்னாகம் கதிரமலைச் சிவன் ஆலயப் பிரதம குருவும், மூத்த சிவாச்சாரியாருமான சிவஸ்ரீ நா.சர்வேஸ்வரக் குருக்கள், இந்துசாதனம் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தியாக மயூரகிரிக் குருக்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொ.பாலசுந்தரம்பிள்ளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியும் தகைசார் பேராசிரியருமான ப.கோபால கிருஷ்ண ஐயர், யாழ்.பல்கலைக்கழக இந்துநாகரீகத் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் மா.வேதநாதன், தமிழ்ச் சைவப் பேரவையின் தலைவரும், ஓய்வுநிலை நீதிபதியுமான நீதியரசர் ஆர்.வசந்தசேனன், சிவாச்சாரியார்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துறைசார் பீடாதிபதிகள், பதிவாளர், விரிவுரையாளர்கள், மாணவர்கள், ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, நான்காவது தடவையாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். கா.கைலாசநாதக் குருக்களின் ஞாபகார்த்த நினைவுப் பேருரை நிகழ்வு இன்றையதினம் இடம்பெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular