நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கைது

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்று கைது செய்யப்பட்டார்.

தியாக தீபம் திலீபனுக்கு சுடரேற்ற முற்பட்ட நிலையிலேயே அவர் கைதாகியுள்ளதாக தெரியவருகிறது.

யாழ். நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபன் நினைவு தூபியைச் சுற்றி பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன

தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபியில் அஞ்சலி நிகழ்வு நடத்தும் எந்தவொரு நபரையும் கைது செய்யும் வகையில் பொலிஸார் கடமைக்கு இவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.