20 லட்சம் ருபாய்க்கு கட்டில் மட்டுமல்லாமல் அரச செலவில் வீட்டையும் புனரமைத்த நாடாளுமன்ற உறுப்பினர்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.பி.ஹேரத் சுமார் 20 லட்சம் ருபாய் செலவில் கட்டில் ஒன்று வாங்கியுள்ளதாக ஜே.வி.பி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கருணாரத்ன கூறியுள்ளார்.

இதுதவிர மேலும் பல மில்லியன் ரூபா செலவில் பல பொருட்களை அவர் வீட்டிற்கு கொள்வனவு செய்திருப்பதாக குறிப்பிடுகின்ற அவர், மோசடிமிக்க பணத்தினால் இவ்வாறான துரித கொள்வனவுகளை செய்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

மேலும், குறித்த உறுப்பினர் அரச செலவில் தனது வீட்டையும் புனரமைப்பு செய்திருப்பதாகவும் நாமல் கருணாரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் பணத்தை மோசடி செய்து அவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், இதற்காக சட்டவிரோதமான முறையில் ஆவணங்களை தயார் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.