கோடை வெயிலினால் உடலில் சூடு அதிகமாக இருக்கும், இதுக்கு அதிக பழச்சாறு பருகி வந்தால் மிகவும் நல்லது. தர்பூசணி – லெமனில் அதிக நீர்ச்சத்து உள்ளது இது உடலில் உள்ள சூட்டை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும்.இப்பொது தர்பூசணி – லெமன் ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
Melon Lemon Juice – தர்பூசணி – லெமன் ஜூஸ்

இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும். பின்னர் தர்பூசணியை தோலை சீவி அதன் விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும் அதன் பிறகு துருவி வைத்துள்ள இஞ்சி அத்துடன் நறுக்கி வைக்கப்பட்டுள்ள தர்பூசணி துண்டுகளையும் அத்துடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து மிக்ஸில் நைஸாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். அரைத்த ஜூஸை பாத்திரத்தில் ஊற்றி, ஐஸ் கட்டிகளைப் போட்டு, சிறிது நேரம் கழித்து பருகலாம்.
Ingredients
Instructions