Tuesday, September 27, 2022
HomeEvents-நிகழ்வுகள்யாழில் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்: எரிபொருள் விநியோகம் தொடர்பிலும் ஆராய்வு(Photos)

யாழில் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்: எரிபொருள் விநியோகம் தொடர்பிலும் ஆராய்வு(Photos)

யாழ்.மாவட்ட அத்தியாவசிய சேவைகள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் நேற்று முன்தினம் புதன்கிழமை(16.08.2022 ) யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் மற்றும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் ஆகியோரின் இணைத் தலைமையில் யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மேற்படி கலந்துரையாடலில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் மற்றும் எரிபொருள் உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்டன.

எரிபொருள் தேவையுடைய இயந்திரங்களுக்கான QR பதிவு நடைமுறைகள், பேக்கரி உற்பத்தியாளர்களுக்கான எரிபொருள் விநியோக நடைமுறைகள், கடற்தொழில், விவசாய நடவடிக்கைகளுக்குப் போதிய எரிபொருளைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கை , திருமண மண்டபம், ஹோட்டல்களுக்கான எரிபொருள் விநியோகம், அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்யும் பாரவூர்திகளுக்கான எரிபொருள் தேவைப்பாடுகள் மற்றும் சிறு கைத்தொழில் துறையினர், வீதி அபிவிருத்திப் பணி நிறுவனங்கள், நிர்மாணப் பணி நிறுவனங்களுக்கான எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டன.

(செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular