12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பினை மாணவர்கள் படித்துவந்த நிலையில் தற்போது சில ஆண்டுகளாக மருத்துவ படிப்புகளை படிக்க நினைப்போர் நீட் தேர்வின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
அந்த வகையில் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர மாணவர்கள் போராடி வரும் நிலையில் தமிழக அரசு நீட் தேர்வில் மாணவர்களைச் சேர்க்கும் வகையில் ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் 50 சதவீத இட ஒதுக்கீடு, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு என பல வகையான விஷயங்களில் கவனம் செலுத்து வருகின்றது.

அதனைத் தொடர்ந்து தமிழக அரசு அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் சேர்க்கையில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு குறித்து ஆலோசித்து வந்தது.
உள் ஒதுக்கீட்டுக்கான சட்ட மசோதா சட்டசபைக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து ஆளுநரின் ஒப்புதலுக்காக சட்ட மசோதா அனுப்பப்பட்டு இருந்தது.
ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப் பின்னர் இந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.
நீட் தேர்வில் நுழைய போதுமான பண வசதிகள் இல்லாத அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த உள் ஒதுக்கீடு பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.