மாறிவரும் கலாச்சாரத்தின் மற்றொருபுறம் உணவுப் பழக்கங்களும் நம் ஆரோக்கியத்தினைக் கெடுக்கும் வகையில் உள்ளது.
துரித உணவுகளின் ஆதிக்கத்தால் ஆங்காங்கே குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை உயிர் இழக்கும் சம்பங்களை நம்மால் கேக்ட முடிகின்றது.
இதனால் அவ்வப்போது உணவுப் பொருட்கள் பலவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் தற்போது மயோனைஸுக்கு கேரள அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதாவது மயோனைஸ் அதிக கொழுப்புச் சத்தினைக் கொண்டு இருப்பதால் அசைவ உணவுகள் பலவற்றிலும் உணவின் ருசியினைக் கூட்ட இது கலக்கப்படுகின்றது.
மயோனைஸை அதிகம் பேர் சாப்பிடுவதால் கேன்சர், கல்லீரல் போன்ற நோய்கள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனையடுத்து ஆரோக்கியமற்ற உணவுகள் குறித்த ஆலோசனைக் கூட்டமானது கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்ட முடிவில் மயோனைஸ் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மயோனைஸுக்கு மாற்றாக தாவர எண்ணெயினைப் பயன்படுத்தக் கோரியுள்ளனர்.
இதுபோக கேரளாவில் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்த 120 ஹோட்டல்களுக்கு சீல் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.