தலைமுடி கொட்டும் பிரச்சினையினை சரிசெய்ய நினைப்போர் இந்த மயோனைஸ் மாஸ்க்கினை கட்டாயம் பயன்படுத்துங்கள். உங்களுக்கு மிகச் சிறந்த ரிசல்ட்டானது கிடைக்கப் பெறும்.

தேவையானவை:
மயோனைஸ்- 3 ஸ்பூன்
கறிவேப்பிலை- கைப்பிடியளவு
கரிசலாங்கண்ணி- கைப்பிடியளவு
எலுமிச்சை – 1
செய்முறை:
1. கறிவேப்பிலை மற்றும் கரிசலாங்கண்ணியை நன்கு பொடித்துக் கொள்ளவும்.
2. அடுத்து மிக்சியில் இவை இரண்டையும் மிக்சியில் போட்டு அரைத்து, வடிகட்டியில் போட்டு சாறு பிழிந்து கொள்ளவும்.
3. அடுத்து ஒரு பாத்திரத்தில் அரைத்த சாறு, மயோனைஸ் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்தால் மயோனைஸ் மாஸ்க் ரெடி.
இந்த மாஸ்க்கினை தலைமுடியில் அப்ளை செய்து, 30 நிமிடங்கள் ஊறவிட்டு சீயக்காய் கொண்டு அலசினால் தலைமுடி கொட்டும் பிரச்சினை சரியாகும்.