Tuesday, August 16, 2022
Homeஆன்மிகம்மயிலணிக் கந்தனுக்கு நாளை கொடியேற்றம்(Photo)

மயிலணிக் கந்தனுக்கு நாளை கொடியேற்றம்(Photo)

சுன்னாகம் மயிலணிக் கந்தசுவாமி கோவில் வருடாந்த மஹோற்சவம் நாளை சனிக்கிழமை(25.6.2022) முற்பகல்-10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்தும் பன்னிரெண்டு தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-1 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை-6 மணிக்கு கைலாசவாகனத் திருவிழாவும், 4 ஆம் திகதி திங்கட்கிழமை பகல் வேட்டைத் திருவிழாவும், மாலை வேளையில் சப்பரத் திருவிழாவும், 5 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல்-10.30 மணிக்குத் தேர்த் திருவிழாவும், 6 ஆம் திகதி புதன்கிழமை காலை-9 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் மாலை-5 மணிக்குத் திருவூஞ்சலைத் தொடர்ந்து கொடியிறக்க உற்சவமும் நடைபெறும் என மேற்படி ஆலய அறங்காவலர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, காலை, மாலை உற்சவங்களாக இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் காலை உற்சவம் காலை-7.30 மணிக்கு அபிஷேகத்துடனும், மாலை உற்சவம் மாலை-5.30 மணிக்கு சாயரட்சைப் பூசையுடனும் ஆரம்பமாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(செய்தித் தொகுப்பு மற்றும் படம்:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular