Tuesday, August 16, 2022
Homeஆன்மிகம்ஆரம்பமானது மாவைக் கந்தன் பெருவிழா(Photo)

ஆரம்பமானது மாவைக் கந்தன் பெருவிழா(Photo)

அபிஷேகக் கந்தன் எனப் போற்றிச் சிறப்பிக்கப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் காம்யோற்சவப் பெருவிழா இன்று திங்கட்கிழமை(04.7.2022) காலை-7 மணிக்கு 108 சங்காபிஷேகத்துடன் ஆரம்பமானது.

தொடர்ந்து காலைச் சந்திப் பூசை, வசந்தமண்டபப் பூசையைத் தொடர்ந்து முருகப் பெருமான் திருவீதி உலா வரும் திருக் காட்சியும் இடம்பெற்றது.

இன்று மாலை-5 மணிக்கு மாவைக் கந்தனுக்கு சங்காபிஷேகத்தைத் தொடர்ந்து மாலை-6.30 மணிக்கு சாயரட்சைப் பூசையும், இரவு-7.15 மணிக்கு வசந்தமண்டபப் பூசையைத் தொடர்ந்து சுவாமி வீதி உலாவும் இடம்பெற உள்ளது.

இதேவேளை, இன்று ஆரம்பமான இவ்வாலய காமயோற்சவப் பெருவிழா தொடர்ச்சியாக 25 தினங்கள் காலை, மாலை உற்சவங்களாகச் சிறப்பாக இடம்பெற உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular