ஈபிடிபியின் கோட்டையாகக் கருதப்படும் யாழ்.ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனையில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் ஊர்காவற்துறையின் பிரதேச சபை உறுப்பினரும், மூத்த போராளியுமான மடுத்தீன் பெனடிக்ற்றின்(சின்னமணி ) ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(27.11.2022) மாலை-06.05 மணி முதல் மாவீரர் வாரத்தின் இறுதிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.


இதன்போது மாவீரர்களை நினைவுகூர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டதுடன் சமநேரத்தில் நிகழ்வில் கலந்து கொண்டவர்களும் ஈகைச் சுடர்கள் ஏற்றி மாவீரர்களை அஞ்சலித்தனர்.
மேற்படி நினைவேந்தல் நிகழ்வில் தேவாலயப் பங்குத் தந்தை, மாவீரர்களின் உறவுகள், கிராமத்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


(செய்தித் தொகுப்பு:- எஸ்.ரவி)