fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஸ்தாபன ரீதியாக செயற்பட முடிவு: யாழில் முக்கிய அறிவிப்பு (Photo)

தமிழ்த்தேசியப் பரப்பிலுள்ள அனைத்து தேசியக் கட்சிகளும் ஸ்தாபன ரீதியாகச் செயற்பட வேண்டும் என விருப்பம் வெளியிட்டுள்ளதாகவும், அவ்வாறு செயற்படுவது தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை(17) காலை அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்று கூடிக் கலந்துரையாடினர்.

குறித்த கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த்தேசியப் பரப்பில் இயங்குகின்ற கட்சிகளாக நாம் இன்று மீண்டும் கூடி ஆராய்ந்தோம். இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த்தேசியக் கட்சிகள் ஸ்தாபன ரீதியாகச் செயற்பட வேண்டுமெனக் கலந்து கொண்ட அனைத்துப் பிரதிநிதிகளும் தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.

இதற்காக நாம் குழுவொன்றை நியமித்துள்ளோம். அமைப்பு ரீதியாக எவ்வாறு நாம் செயற்பட வேண்டும்? எவ்வாறு நாம் ஸ்தாபன ரீதியாக அமைய வேண்டும்? என இந்தக் குழு ஆராயவுள்ளது. அவர்கள் எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன்னர் அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கவுள்ளனர்.

அதன் பின்னர் நாம் அந்த அறிக்கை தொடர்பில் ஆராயவுள்ளோம். மேலும் இன்றைய கலந்துரையாடலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினருக்கும் நாம் அழைப்பு விடுத்திருந்தோம். எனினும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. எனினும், நாம் தமிழ்த்தேசியப் பரப்பில் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக இயங்குவதற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடனும் பேசவுள்ளோம்.

மேலும் தமிழர்கள் எதிர்நோக்குகின்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தமிழ்த்தேசியப் பரப்பில் இயங்குகின்ற நாம் அனைவரும் ஓரணியில் இணைந்து பயணிப்பது எனத் தீர்மானித்துள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

சீரற்ற வானிலை – 20 ஆயிரத்து 265 பேர் பாதிப்பு!

World News

பொலிஸ் அதிகாரியை கொன்றவர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்

World News

ஐ.நா. சபை கூட்டத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு

World News