வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நேற்று(28) முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.இப் போராட்டங்களினால் விடுக்கப்பட்ட ஏகோபித்த வேண்டுகோளை அரசு ஏற்க வேண்டும் எனவும், மக்களின் ஜனநாயக உரிமைகளை சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நேற்று(28) முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்தின் நிறைவில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உலகில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் கடப்பாடுகள் மனித குலத்தினாலும், ஐ.நா சாசனத்தினாலும், உடன்படிக்கைகளினாலும் அங்கீகரிக்கப்பட்ட கடப்பாடாகும்.
உலகம் முழுவதும் இக் கடப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றபோதும் இலங்கையில் இறந்தவர்களை நினைவு கூரும் கடப்பாடுகள் அரசுகளினால் மறுக்கப்பட்டும், நிராகரிக்கப்பட்டும் வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.