உலக அளவில் ரசிகர்கள் அனைவரும் ஆர்வமோடு எதிர்பார்த்த அவேஞ்சர்ஸ் எண்ட் கேம் படமானது வருகிற ஏப்ரல் 26-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. படம் மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ரஸோ சகோதரர்கள் இயக்கியிருக்கும் இப்படத்தில் மார்வெல் சீரியசில் இடம்பெற்றிருந்த எல்லா ஹீரோக்களும் ஒன்றாக இணைந்துள்ள கடைசி பாகம் என்பதால் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மார்வேல் ஆன்தம் உருவாக்கியுள்ளார். இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் பாடலை இந்திய மார்வெல் ரசிகர்களுக்காக உருவாக்கியுள்ளார். இந்தப் பாடல் ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதுபற்றி ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது, என் குடும்பம் மற்றும் என்னைச் சுற்றி பல மார்வெல் ரசிகர்கள் இருப்பதால், அவெஞ்சர்ஸ்க்கு புரிந்த மற்றும் பொருத்தமானவற்றைக் கொடுக்க எனக்கு நிறைய அழுத்தம் எனக்கு ஏற்பட்டது. மார்வெல் ஆர்வலர்கள் மற்றும் இசை ரசிகர்கள் இப்பாடலை ரசிப்பார்கள் என நான் நம்புகிறேன் என்று கூறினார்.
இப்படத்தில் ராபர்ட் டவுனி, கிறிஸ் கெம்ஸ்வொர்த், பார்க் ரூபலா, கிறிஸ் வெனஸ், ஸ்கேர்லட் ஜான்சன், டாம் ஹாலன்ட், எலிசபெத் ஆல்சன் என பலர் நடித்துள்ளார்கள்.