fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » ஸ்ருதிஹாசனுக்கு திருமணமா? அவரே சொன்ன பதில் இதுதாங்க!!
சினிமா

ஸ்ருதிஹாசனுக்கு திருமணமா? அவரே சொன்ன பதில் இதுதாங்க!!

தமிழ் மற்றும் தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகை சுருதிஹாசன். இவர் நடிகை என்பதைத் தாண்டி பாடகியாகவும், இசை அமைப்பாளராகவும் வலம் வருபவர்.

இவர் தன்னுடைய 6 வது வயதிலேயே தேவர் மகன் படத்தில் பாடகியாக அறிமுகமாகி இருப்பார். தமிழில் ஹே ராம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பல மொழிகளில் நடித்து புகழ்பெற்றார்.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் வேதாளம், அது பெரிதளவில் போகவில்லை, அதன்பின்னர் தன்னுடைய சொந்தக் காரணங்களினால் சில வருடங்களாக சினிமாவில் நடிக்கவில்லை.

ஸ்ருதிஹாசனுக்கு திருமணமா? அவரே சொன்ன பதில் இதுதாங்க!!

தற்போது இயக்குநர் ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் லாபம். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இணைய உரையாடலில் இவரது ரசிகர், “உங்களுக்கு பாய் பிரண்ட் இருக்கிறாரா? இந்த ஆண்டு திருமணமா? என்று கேட்க பாய் பிரண்டு இருப்பதாகவும் இந்த ஆண்டு திருமணம் இல்லை என்றும் பதில் அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து மற்றொரு ரசிகர், “நீங்கள் தற்போது காதலில் இருக்கிறீர்களா? என்று கேள்விகள் கேட்க, நான் எப்போதுமே காதலில் தான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Related posts

சிம்புவை பங்கமாய் கலாய்த்த யோகிபாபு ! ட்ரிப் படத்தின் டீசர்

TamilTwin India

படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ள கவின்!!!

N N

250 குடும்பங்களுக்கு உதவி செய்த வில்லன் சாய் தீணா !

TamilTwin India