Tuesday, September 27, 2022
Homeஆன்மிகம்காலியில் சமூகக் கேடுகளில் ஈடுபட்ட போலிப் பூசகரைத் தளையிட்ட காவல்துறை: சிவசேனைத் தலைவர் பாராட்டு

காலியில் சமூகக் கேடுகளில் ஈடுபட்ட போலிப் பூசகரைத் தளையிட்ட காவல்துறை: சிவசேனைத் தலைவர் பாராட்டு

காலியில் சமூகக் கேடுகளில் ஈடுபட்ட போலிப் பூசகரைத் தளையிட்ட காவல்துறையை இலங்கை சிவசேனைத் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் பாராட்டியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் இன்று புதன்கிழமை(17.8.2022) செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தச் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பசுத்தோல் போர்த்த புலியாக, ஓநாய்த் தோல் போர்த்த ஆடாக காலியில் சைவ வேடதாரி ஒருவர் பூசகர் வேடம் பூண்டு சமூகக் கேடுகளில் ஈடுபட்டுக் கொள்ளையடித்துப் பலரை ஏமாற்றி வருவதைத் தெரிந்த காவல்துறையினர் நேர்மையான கடமை உணர்வுடன் கையூட்டுகளுக்கு அப்பால் அப் போலிப் பூசகரைத் தளையிட்டு நீதிமன்றம் முன் நிறுத்தியதால் இலங்கைச் சைவ உலகம் உள்ளகக் கேடுகளில் இருந்து விடுபட்டுள்ளது.

பூணூல் அணிந்து பூசகராக இருப்பவர்களும், பூணூல் அணியாமல் பூசகராக இருப்பவரும் இத்தகைய கேடுகளில் ஈடுபடுவதில்லை. தமது வாழ்க்கையைத் தெய்வீக ஆன்மீக வாழ்க்கையாகக் கருதி ஈடுபாட்டுடன் சைவத் தமிழ் உலகத்தை வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களிடையே இத்தகைய கறுப்பாடுகள் இருப்பதால் சைவ உலகுக்கு கேடு. இந்தக் கேட்டினை அடையாளம் கண்டு நீக்கிய காவல் துறைக்கு நன்றி எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular