Tuesday, September 27, 2022
Homeஆன்மிகம்மல்லாகம் பழம்பதி விநாயகருக்கு நாளை கொடியேற்றம்(Photos)

மல்லாகம் பழம்பதி விநாயகருக்கு நாளை கொடியேற்றம்(Photos)

யாழ்.மல்லாகம் பழம்பதி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நாளை செவ்வாய்க்கிழமை(16.8.2022) முற்பகல்-11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.

தொடர்ந்தும் 11 தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ்வாலய மஹோற்சவப் பெருவிழா நடைபெறும்.

இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை-4 மணிக்கு வேட்டைத் திருவிழாவும், 24 ஆம் திகதி புதன்கிழமை மாலை-7 மணிக்குச் சப்பரத் திருவிழாவும், 25 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல்-10 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல்-10 மணிக்குத் தீர்த்தோற்சவமும், அன்றையதினம் இரவு கொடியிறக்க உற்சவமும் இடம்பெறும்.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular