ஹற்றன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டிரதன் தோட்டம் சித்தரவத்தைப் பிரிவு தேயிலை மலைப் பகுதியில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக ஹற்றன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலம் இன்று மதியம் கண்டெடுக்கப்பட்டதாகவும் 55 முதல் 60 வயது மதிக்கத்தக்க ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இது கொலையா, தற்கொலை என்பது தொடர்பாக விசாரணை இடம்பெற்று வருவதுடன் மரண விசாரணைகளின் பின்னர் வைத்திய பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.