இலங்கை மின்சார சபை மீது முறைப்பாடு செய்த மலேசிய நிறுவனம்

மலேசிய நிறுவனம் ஒன்று இலங்கை மின்சார சபையிடமிருந்து 180 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கோரி சிங்கப்பூர் நடுவர் மன்றத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்னுற்பத்தி திட்டத்தை அமைப்பதற்கு மலேசிய நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப்பட்டதாகவும், பின்னர் அது இரத்துச் செய்யப்பட்டதாகவும் இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்தார்.

நடுவர் மன்றத்தால் விசாரிக்கப்பட்டு வரும் இந்த வழக்குக்காக சட்டத்தரணிகளுக்காக 200 மில்லியனுக்கும் அதிகமான பணம் செலவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மின்சாரசபை அதிகாரி ஒருவர் 2 மில்லியன் டொலர் இலஞ்சம் கேட்டதாக குறித்த கம்பனி நடுவர் மன்றத்தில் புகார் அளித்தது. இலஞ்சம் கொடுக்காததால் தங்கள் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமம் இரத்து செய்யப்பட்டதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.