fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

வரலட்சுமிக்கு மக்கள் செல்வி எனப் பட்டம் வழங்கிய படக்குழு

                வரலட்சுமி சரத்குமார், இவர் தமிழில் நடித்த படங்கள் அனைத்திலும் அவருடைய கதாப்பாத்திரம் வலுவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.  இவர் நடித்த போடா போடி, தாரை தப்பட்டை, சர்கார், சண்டக்கோழி 2 போன்ற கதைகளைத் தொடர்ந்து இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலேயே தனது கவனத்தினை செலுத்தி வருகிறார்.  தற்போது பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இவருக்கு, டேனி படக்குழுவினர் மக்கள் செல்வி எனப் பட்டம் அளித்து உள்ளனர். 

வரலட்சுமிக்கு மக்கள் செல்வி எனப் பட்டம் வழங்கிய படக்குழு

டேனி படத்தினை சந்தான மூர்த்தி இயக்குகிறார்.  இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்து இருக்கிறார்.  வரலட்சுமியுடன் யோகி பாபு, சாயாஜி ஷிண்டே, வேலராமமூர்த்தி நடிக்கிறார்கள்.  இவருடன் ஒரு நாயும் நடித்து இருக்கிறது. போலீஸ் மோப்ப நாயாக இது நடித்து இருக்கிறது.  படப்பிடிப்பில் வரலட்சுமி சரத்குமார் எங்கள் வீட்டு பெண் போல பழகினார்.  எனவே அவர் பெயருக்கு முன்னால் மக்கள் செல்வி என்ற பட்டத்தினை போட படக்குழுவினர் முடிவு செய்து உள்ளது.  இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வரலட்சுமி சரத்குமார் அவர்கள் பிறந்த நாள் ஆன இன்று படக்குழு வெளியிட்டு உள்ளது.

Related posts

”அரண்மனை 3” மீண்டும் இணையும் ஆண்ட்ரியா

TamilTwin India

இந்தக் கல்வி முறையில் மாற்றம் தேவை- சூர்யா ஆவேசம்!

N N

அட்லிக்கு பச்சைக் கொடி காட்டிய ஷாருக்கான் !

TamilTwin India