பெண்கள் அனைவருக்கும் அழகுக்கு அழகு சேர்ப்பவை விரல்களும் விரல்களில் உள்ள நகங்களும் தான். நகங்களை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டியது அனைவரின் கடமை ஆகும்.
விரல் நகங்களில் உள்ள சொரசொரப்பு நீங்கி நல்ல பளபளப்பினை பெறுவதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் நல்ல தீர்வினை பெறலாம்.

நம் நகங்களை உடையாமல் பாதுகாப்பதில் ஆலிவ் எண்ணெய்க்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஆலிவ் எண்ணெய்யினை லேசாக சூடாக்கி நகங்களின் மீது தடவி வந்தால் நகங்கள் உடையாமல் இருக்கும்.
நமது நகங்கள் கருமை நிறமாக மாறி சொத்தையாக இருந்தால் துத்தி இலையினை சாம்பிராணியுடன் சேர்த்து அரைத்து விரல்களுக்கு தடவி வந்தால் விரல் கருமை நீங்கும்.
நமது உடலில் கால்சியம் சத்து குறைந்து இருந்தாலும் நகங்கள் உடைந்து போவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே நாம் உணவில் கால்சியம் அதிகம் உள்ள பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் வெள்ளை ஜெலட்டினை விரல் நகங்களுக்கு பூசி வந்தால் விரல் நகங்கள் உடைவதைச் சரி செய்யலாம். ஏனெனில் வெள்ளை ஜெலட்டினில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது.