fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

மூக்கின் அழகை பராமரிக்க சில டிப்ஸ்

பெண்களை பார்த்தால் மூக்கும் முழியுமாக நல்ல லட்சணமாக இருக்கிறாள் என்று தான் சொல்வார்கள். முகத்திற்கு அழகை கொடுக்கும் மூக்கு, எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சிலருக்கு கூர்மையாகவும், சிலருக்கு சப்பையாகவும், கிளி மூக்கு போன்றும், குடை மிளகாய் போன்று பெரியதாகவும் இருக்கும். ஒழுங்காக பராமரித்து, அழகாக மேக்கப் செய்து கொண்டால் கவலைப்படத் தேவையில்லை. மூக்கின் பராமரிப்பு மிகவும் எளிது.

மூக்கின் அழகை பராமரிக்க சில டிப்ஸ்

      ரெகுலரான பேஷியல் கூட போதுமானது. வீட்டிலேயே பேஷியல் செய்வது போல் எண்ணெய்ப்பசை உள்ள நல்ல பேஸ் மசாஜ் க்ரீமை மூக்கிற்கு நன்றாக தடவி, மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் கொதித்த நீரை ஊற்றி, நன்றாக விர்க்கும் வரை ஆவி பிடிக்க வேண்டும். இப்போது வெளிச்சமான இடத்தில் அமர்ந்து, கண்ணாடியைப் பார்த்து பிளாக் ஹெட்ஸ் இருக்கும் இடங்களில் பிளாக் ஹெட் ரிமூவரால் மெதுவாக அழுத்த வேண்டும்.

வெளியே வேரோடு வரும் பிளாக் ஹெட்ஸை திசு பேப்பரால் துடைத்து எடுத்துவிடுங்கள். இப்படியே மூக்கில் உள்ள பிளாக், ஒயிட் ஹெட்ஸ் முழுவதுமாக நீக்கி விடலாம். இப்போது குளிர்ந்த நீரில் மூக்கினை நன்றாக கழுவினால் போதும். அதன் பிறகு மேக்கப் செய்யும் போது மூக்கிற்கு ஏற்ப மேக்கப் செய்து அழகை பராமரிக்கலாம்.

Related posts

முடியை அடர்த்தியாக்கும் வாழைப்பழம்-கொக்கோ மாஸ்க்!!

N N

வீட்டிலேயே சுருள் முடியினை நேராக்க இதை செய்து பாருங்க!!

N N

கருப்பான முகத்தை வெள்ளையாக மாற்ற!!

N N