Sunday, September 26, 2021
Homeசெய்திகள்இன்று மஹாசிவராத்திரி சிறப்பு வழிபாடு

இன்று மஹாசிவராத்திரி சிறப்பு வழிபாடு

மஹாசிவராத்திரியை முன்னிட்டு இன்று (மார்ச் 4) நாடு முழுவதும் உள்ள சிவ ஆலயங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இன்று மாலை முதல் நாளை அதிகாலை வரை விடிய விடிய நடைபெறும் அபிஷேகத்திற்குத் தேவையான பொருட்களை சிவ ஆலயங்களுக்கு சென்று வாங்கி கொடுத்து வருகின்றனர் மக்கள்.

தமிழ்நாட்டில் சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயில், திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் கோயில், தஞ்சை பெரிய கோயில், திருவாரூர் தியாகராஜர் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில் போன்ற அனைத்து கோயில்களிலும் இறைவனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. சிவ ஆலயங்களில் மக்கள் கூட்டம் இறைவன் தரிசனத்திற்காக அலை மோதுகிறது.

இன்று மஹாசிவராத்திரி சிறப்பு வழிபாடு

அதிலும் குறிப்பாக கோவையில் உள்ள ஈசா யோகா மையத்தின் மைதானத்தில் மஹாசிவராத்திரி வழிபாடு மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது.

இது இந்த மையத்தில் நடைபெறும் 25 ஆவது மஹாசிவராத்திரி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது, இவ்விழாவில் ஆன்மிக குரு சத்குரு மக்களுக்கு ஆன்மிக உரை வழங்குகிறார். இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று உள்ளனர். நேரில் சென்று பார்க்கமுடியாதவர்க்கு உதவும் வகையில் அனைத்து சேனல்களிலும் நேரலை இன்று (மார்ச் 4) மாலை 4 மணிக்கு ஆரம்பமானது.

நாளைக்காலை 6 மணி வரை இவ்விழா நடைபெறும். சிவ ஆலயங்களில் நடைபெற உள்ள நான்கு கால அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை பக்தர்கள் அளித்து வருகின்றனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments