மதுபாலாவின் முதல் திரை அறிமுகம் மலையாளத் திரைப்படம் ஆகும் தமிழ் திரைப்படங்களில் முதன்முதலாக அழகன் என்னும் திரைப்படத்தில் மம்முட்டி, பானுப்பிரியா மற்றும் கீதா ஆகியோருடன் நடித்தார். தற்போது அக்னி தேவி படத்தில் நடித்து வருகிறார். சென்னையில் ஒரு நாள் 2 பட இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குனரான சாம் சூர்யா இயக்கத்தில் உருவாகிய படம் அக்னி தேவி படம் ஆகும்.

அக்னி தேவி படத்தில் பாபி சிம்ஹா நாயகனாகவும், ரம்யா நம்பீசன் நாயகியாகவும் நடித்துள்ளார். இப்படத்தில் ஒரு முக்கியமான கதாநாயகியாக அதாவது வில்லியாக மதுபாலா நடித்துள்ளார். டிரைலரில் மதுபாலா பேசிய அரசியல் வசனங்கள் எல்லாம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அக்னி தேவி படம் வருகிற 22-ம் தேதி வெளியாக இருக்கிறது. ஜேக்ஸ் பெஜாய் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஜனா ஒளிப்பதிவு அமைத்துள்ளார். சீன்டோ ஸ்டூடியோ சார்பில் ஜே.பி.ஆர் இந்த படத்தை தயாரித்துள்ளார் என கூறப்படுகிறது. அக்னி தேவி படத்தில் நடித்ததின் மூலமாக மதுபாலா ரீஎண்ட்ரி கொடுக்கிறார்.