fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

மாதவன் இயக்கி நடிக்கும் படத்தில் இணையும் சூர்யா, ஷாருக்கான்

                இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணன் 1994 – ல் ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டிற்கு விற்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.  அதன் பின்னர் குற்றம் செய்யவில்லை என நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.  இவருடைய வாழ்க்கை வரலாற்றினை ராக்கெட்ரி என்ற படமாக எடுக்க உள்ளனர்.

மாதவன் இயக்கி நடிக்கும் படத்தில் இணையும் சூர்யா, ஷாருக்கான்

      மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து திரைப்படத்தில் மாதவனும் சூர்யாவும் ஒன்றாக நடித்து இருந்தனர்.  தற்போது 15 வருட இடைவெளியின் பின் மீண்டும் இருவரும் இணைய உள்ளனர்.  ராக்கெட்ரி திரைப்படத்தினை மாதவன் இயக்கி நடிக்கிறார்.  இப்படம் தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் படமாகி வருகிறது.  இப்படத்தில் நடிகர் சூர்யாவும் நடிகர் ஷாருகானும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  இப்படத்தில் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் மாதவன் நடிக்க இருக்கிறார்.  சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  சிறிது நேரம் வரும் கதாபாத்திரமாக இருந்தாலும் படத்தின் கதையில் திருப்புமுனையினை ஏற்படுத்தும் கதாபாத்திரமாக இவர் நடிக்கிறார்.  இப்படத்தின் இந்திப் பதிப்பில் சூர்யா கதாபாத்திரத்தில் ஷாருகான் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  படத்தில் நடிகை சிம்ரனும் நடிக்கிறார்.

Related posts

பணம் மட்டுமே குறிக்கோள் இல்லை – ஜிவி பிரகாஷ்

N N

ட்விட்டரில் கதறும் காமெடி நடிகர், வைரலாகும் மீம் !

TamilTwin India

80ஸ் லுக்கில் சந்தானம் வெளியானது பிஸ்கோத் பர்ஸ்ட் லுக் போஸ்டர் !

TamilTwin India