fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

மாதவன் நடிப்பில் யாவரும் நலம் இரண்டாம் பாகம்

மாதவன் – நீது சந்திரா நடித்த யாவரும் நலம் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது என்பது அனைவரும் அறிந்தது. இந்நிலையில் விக்ரம் குமார் இயக்கத்தில் `யாவரும் நலம்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது.

மாதவன் தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை கதை படத்தை இயக்கி வருகிறார் என்ற தகவல் வலைதளத்தில் வெளியாகி அவருக்கு அதிகப் பாராட்டுகளைக் குவித்தது. நம்பி நாராயணன் பணியில் இருந்தபோது ராக்கெட் ரகசியங்களை விற்றதாக கைது செய்யப்பட்டதையும், பின்னர் அவர் நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதையும் மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது என்ற செய்தி வெளியானது.

மாதவன் நடிப்பில் யாவரும் நலம் இரண்டாம் பாகம்

இதில் நம்பி நாராயணன் வேடத்தில் 3 தோற்றங்களில் மாதவன் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த படம் தயாராகிறது.

இந்த நிலையில் விக்ரம் குமார் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் கடந்த 2009-ல் வெளியான யாவரும் நலம் படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கப்போவதாக கோலிவுட்டில் செய்திகள் கசிந்தது.  யாவரும் நலம் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாகவிருப்பதை மாதவன் உறுதிப்படுத்தி உள்ளார்.

ராக்கெட் படத்தை முடித்த பிறகு யாவரும் நலம் 2 படத்திற்கான பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் அசத்திய தமிழ் வம்சாவளி நடிகர்

TamilTwin India

பாடகி சுசித்ராவின் அதிர்ச்சி டுவீட், சிபிசிஐடி போலீசார் என்னை மிரட்டினார்கள்..!

TamilTwin India

பசி பற்றி பதிவிட்ட விஜய் சேதுபதி மோகன் ஜி கொடுத்த பதிலடி, வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

TamilTwin India