
தமிழ்த்தேசியப் பண்பாட்டுப் பேரவை இவ்வருட மாவீரர் நாள் நினைவேந்தலைத் தமிழர் தாயகத்தின் வட பகுதியில் பிரத்தியேக இடமொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை(28) பிற்பகல் உணர்வுபூர்வமாக அனுஷ்டித்துள்ளது.
இலங்கைப் பொலிஸார், பொலிஸ் புலனாய்வுப் பிரிவு, இராணுவப் புலனாய்வுப் பிரிவினர், பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர், தேசிய புலனாய்வுப் பிரிவினர் ஆகியோரின் கெடுபிடியான நடவடிக்கைகளுக்கு மத்தியில் குறித்த நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, நினைவுகூரல்களைக் கூட ஒழித்து நடாத்த வேண்டிய ஒரு நாட்டில் தான் தமிழர்கள் இருக்கிறார்கள். இவ்வாறானதொரு ஜனநாயகம் தான் சிறிலங்காவில் தற்போதுமிருக்கின்றது எனத் தமிழ்த்தேசியப் பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.நிஷாந்தன் கடுமையாகச் சாடியுள்ளார்.
தெற்கு ஊடகங்கள் LPL ஐ பற்றிப் பேசுகின்றன. ஆனால், நினைவு கூருவதற்காகப் போராடும் வட- கிழக்கு மக்களைப் பற்றி பேசவில்லை. அவர்களுக்காக குரல் கொடுக்கவில்லை எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

{எஸ். ரவி}