fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » ஆபத்தான கட்டத்தை தாண்டினார் சிவாஜிலிங்கம்!
இலங்கைச் செய்திகள் செய்திகள்

ஆபத்தான கட்டத்தை தாண்டினார் சிவாஜிலிங்கம்!

நேற்றிரவு(20) பாம்பு தீண்டிய நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த்தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும், மூத்த தமிழ் அரசியல்வாதியுமான எம்.கே. சிவாஜிலிங்கத்தின் உடல்நிலை ஆபத்தான கட்டத்தை தாண்டி சாதாரணநிலைக்கு வந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது வீடு செல்வதற்காக ஆயத்தமான நிலையில் வல்வெட்டித்துறையிலுள்ள தனது அலுவலகத்தின் கதவை மூடிய போது எதிர்பாராத வகையில் கதவிலிருந்த பாம்பு தீண்டியுள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாகப் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுத் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வந்த சிவாஜிலிங்கம் தற்போது சாதாரண நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும் தெரிய வருகிறது.

{செய்தித் தொகுப்பு:- எஸ். ரவி}

Related posts

யாழ். குப்பிழானில் ஆரம்பமான வீதியோட்டமும் மிதிவண்டி ஓட்டமும்: மாணவ- மாணவியர் உற்சாகத்துடன் பங்கேற்பு (Videos, Photos)

TamilTwin

யாழ். வயாவிளான் மத்திய கல்லூரியில் இன்று ‘வயவர்களின் சங்கமம்’

TamilTwin

பதவி நீக்க விசாரணையில் ஆஜராக டிரம்ப் மறுப்பு

World News