fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் உலகச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள்

விடுலைப்புலிகளின் வேண்டுகோளுக்கிணங்கவே நோர்வே நடுநிலைமை வகித்தது – எரிக் சொல்ஹெய்ம்

விடுதைப்புலிகள் தம்மை அழைத்ததன் காரணத்தாலேயே தமது நாடு அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் நடுநிலைமை வகித்ததாக நோர்வே நாட்டின் முன்னாள் அமைதித் தூதர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

லண்டனில் உள்ள தனியார் ஊடகம் ஒன்றிற்கு அவர் அவர் வழங்கிய விசேட நேர்காணல் ஒன்றிலேயே குறித்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார் .

அந்த நேர் காணலில் மேலும் கருத்து தெரிவித்த அவர் இலங்கைக்கான சமாதான அனுசரணைப்பணியில் பிரான்ஸ் பங்கேற்க வேண்டுமென அப்போதைய அரசதலைவர் சந்திரிகா விரும்பியதாகவும் எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டார்.

இருந்த போதிலும் இலங்கைக்கான அனுசரணை பணியில் நோர்வேயே பங்கெடுக்கவேண்டுமென விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் விரும்பியதன் அடிப்படையிலேயே நோர்வே இந்தப்பணியில் இறங்கியதாகவும் எரிக் சொல்ஹெய்ம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்காக 1998 ஆண்டு நோர்வேயில் உள்ள தமது அலுவலகத்திற்கு நேரில் வருகைதந்த தமிழீழ விடுலைப்புலிகள் அமைப்பினர் தமக்கு இந்த வேண்டுகோளை முன்வைத்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் .

அதே சமயம் நோர்வேயின் தலையீட்டுடன் நாட்டில் அப்போதிருந்த ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரது தலைமையிலான அரசாங்கத்திற்கும், விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் பல கட்டங்களாக இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உலகின் நீண்ட தூர விமான சேவை சோதனை வெற்றி!

World News

யாழ். சுன்னாகம் முகாமில் திடீர் மோதல்: பெண்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் படுகாயம்!

TamilTwin

தீவிரவாத விசாரணைகள் பிரிவில் ஹிஸ்புல்லாஹ் முன்னிலை!

TamilTwin