fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

உருவாகியுள்ள தாழமுக்கம் ”நிவார்” புயலாக மாறும் வாய்ப்பு

யாழ்ப்பாணத்திலிருந்து 638 கிலோ மீற்றர் தொலைவில் உருவாகியிருக்கும் தாழமுக்கம் ஒரு புயலாக மாறும் வாய்ப்புக்கள் பெரும்பாலும் உள்ளதாக யாழ்.பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, குறித்த தாழமுக்கம் புயலாக மாறினால் அதற்கு “நிவார்” என்ற பெயர் வழங்கப்படும். அந்த பெயரை ஈரான் நாடு இட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் தாழமுக்கம் வேமாக நகர்ந்து வரும் நிலையில் இலங்கையின் வடகிழக்கு பகுதியில் அதன் தாக்கத்தை உணரலாம் எனவும் கூறியுள்ளார்.

மேலும் குறித்த தாழமுக்கம் 23ம் திகதி இரவு புல்மோட்டைக்கு நேராக தரைப்பகுதியை நோக்கி நகர்ந்து 24ம் திகதி முல்லைத்தீவின் கரையோரபகுதிக்கு சமாந்தரமாக வடமராட்சி கிழக்கு 24 மற்றும் 25ம் திகதி வரை நகர்ந்து பின்னர் வடக்கு நோக்கி நகர்கின்றது.

இன்றைய நிலையில் திருகோணமலை, முல்லைத்தீவு, வடமராட்சி கிழக்கு மற்றும் கரையோரப்பகுதிகளில் கன மழையும் கடும் காற்றும் வீசக் கூடும். முல்லைத்தீவுக்கு 160 மி.மீ. க்கு கூடுதலாகவும், வடமராட்சி கிழக்கிற்கு 145 மி.மீ. க்கு கூடுதலாகவும் கிளிநொச்சிக்கு 115 மி.மீ. க்கு அண்மித்தும் மழைக்கு வாய்ப்புண்டு. வடக்கின் ஏனைய பகுதிகளிலும் இக்காலப்பகுதியில் கன மழையுடன் காற்றின் வேகமும் அதிகரித்துக் காணப்படும்.

எனவே முன்னெச்சரிக்கையாக வீடுகளுக்கு அண்மித்துக் காணப்படும் கடும் காற்றினால் பாதிக்கப்படும் மரங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

சஜித்தே ஜனாதிபதி வேட்பாளர்!

TamilTwin

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்!

World News

யாழ். மாநகர சபை சுகாதாரத் துறையில் அரசியல் தலையீடு ..!!

TamilTwin