யாழில் தொடரும் எரிபொருளுக்கான நீள் வரிசைகள்: விலை அதிகரிப்புத் தொடர்பில் மக்கள் கடும் விசனம்(Photos)

கடும் பொருளாதார நெருக்கடியின் எதிரொலியாக நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக யாழிலும் பொதுமக்கள் தொடர்ச்சியாகப் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்தநிலையில் மீளவும் எரிபொருட்களின் சடுதியான விலை அதிகரிப்பு பொதுமக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமையும்(24.5.2022) யாழ்.மாவட்டத்தில் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காகப் பரவலாகப் பல்வேறு இடங்களிலும் மிக நீண்ட வரிசைகளில் மோட்டார்ச் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர். நீண்ட நேரம் காத்திருந்தே எரிபொருளைப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாகத் தெரிவித்த பொதுமக்கள் இன்று அதிகாலை முதல் எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரித்தமை தொடர்பிலும் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)