பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 22 ஆவது சைவ மாநாட்டின் முதலாம் நாளான இன்று ஆரம்பவிழாவாக இனிதே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மேற்படி மாநாட்டில் பல சைவப் பிரமுகர்களும் இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து கலந்து சிறப்பித்துள்ளார்கள்.
இம்முறை மாநாட்டில் “திருவாசகப் பெருமைகள்” என்ற மாநாட்டுக் கருப்பொருளாக கொள்ளப்பட்டதால் அனைவரும் திருவாசத்தில் உருகுவார்கள் என்பதில் ஐயமில்லை.
இப்படி திருவாசகப் பெருமையை உணர்த்தி உருக வைக்க திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், கம்பவாரிதி இ.ஜெயராஜ், வேலன் சுவாமிகள் இணையும் இதேவேளை இன்னிசையால் உருகவைக்க உன்னிக்கிருஷ்ணன் மற்றும் மகள் உத்தாரா உன்னிக்கிருஷ்ணனும் இணைந்து சிறப்பித்துள்ளார்கள்.










