யாழில் மதுபானசாலைகள் முன்பு முற்றுகையிடும் மதுப்பிரியர்கள்!

நாட்டில் கொரொனா தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக நாட்டில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம்(17) அரசாங்கத்தினால் மதுபானசாலைகள் திறக்க அனுமதி அளிக்கப் பட்டது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து மதுபான சாலைகளின் முன்பாகவும் நீண்ட வரிசையில் மது பிரியர்கள் காத்திருந்து மதுபானத்தை கொள்வனவு செய்வதை காணக்கூடியதாகவுள்ளது.

மேலும் மதுபானசாலைகளுக்கு அண்மையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு சமூக இடைவெளி, பேணப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.