fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
மேலும் ஒரு புதுவரவு மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வருகிறது
சினிமா

மேலும் ஒரு புதுவரவு மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வருகிறது

அக்காள் தம்பி பாசத்தினை எடுத்துச் சொல்லும் படமாக உருவாகும் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் சித்தார்த்தும், ஜி. வி. பிரகாஷ் குமாரும் இணைந்து நடிக்கின்றனர்.  இப்படத்தில் சித்தார்த் டிராபிக் போலிஸாக நடிக்கிறார். ஜி. வி. பிரகாஷ் குமார் இதில் பைக் ரேஸராக நடித்து இருக்கிறார்.  பிச்சைக்காரன் படத்தினை அடுத்து இயக்குநர் சசி இயக்குகின்ற திரைப்படம் இது ஆகும்.

      இப்படத்தில் சித்தார்த் ஜோடியாக நடிக்க மலையாள நடிகையான லிஜோ மோள் நடிக்கிறார்.  இவர் மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற படங்களான மகிஷிண்டே பிரதிகாரம், கட்டபனையில் ஹிரித்திக் ரோ‌ஷன் ஆகிய படங்களில் நடித்தவர் ஆவார்.  தமிழில் இவர் அறிமுகம் ஆகும் முதல் திரைப்படம் இது ஆகும்.  லிஜோ மோள் தம்பியாக ஜி. வி. பிரகாஷ் குமார் நடித்து இருக்கிறார்.  படப்பிடிப்பு பணிகள் பாதி முடிவடைந்த நிலையில் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  லிஜோ மோள், சித்தார்த்,      ஜி. வி. பிரகாஷ் இவர்களுடன் காஷ்மீரா, மதுசூதனன், யூடியூப் நடிகர்கள் பலர் இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

Related posts

”சிகரெட் பிடிக்காதிங்க” அட்வைஸ் செய்த பிரபலம், கண்டமேனிக்கு கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்..!

TamilTwin India

கொலையுதிர் காலம் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

N N

அருண் விஜயின் அடுத்த படத்தின் பெயர் இதுதான்!!

N N