fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » அமுலில் உள்ள முடக்கத்தை நீடிக்குமாறு கடிதம்
இலங்கைச் செய்திகள் செய்திகள்

அமுலில் உள்ள முடக்கத்தை நீடிக்குமாறு கடிதம்

தற்போது அமுலில் உள்ள முடக்கத்தை 21ம் திகதி தளர்த்தாமல், தொடர்ந்தும் நீடிக்குமாறு கோரி இலங்கை வைத்திய சங்கம் (SLMA) ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

அதில் குறிப்பிட்டுள்ளதாவது,

“இந்த நிர்கதியான தருணத்தில், தற்போதைய பயணக்கட்டுப்பாடு நடவடிக்கைகளை தடையின்றி மேலும் தொடர வேண்டும் என நாங்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

சில நாட்களுக்கு பயணத்தடையை நீக்குவதன் மூலம், இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் நிலவியது போன்று பெரிய தொற்றுநோய்க்கு நம்மை மீண்டும் அழைத்துச் செல்லும்.
கடந்த மூன்று வாரங்கள் மூடப்பட்டதன் விளைவாக கிடைத்த பலன்களை தியாகம் செய்ய வேண்டி நேரிடும்,

மேலும், தற்போதைய கட்டுப்பாடான நிலைக்கு மீண்டும் நம்மைத் திருப்பி கொண்டுவர, அதிக நேரம் மற்றும் முயற்சி தேவைப்படும்.” என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா!

World News

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு பரிகாரம் வழங்க விசேட குழு: அமைச்சரவையில் தீர்மானம்

World News

ஆப்கானிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு: சிதறிய உடல்கள்!! (Video, Photos)

TamilTwin