புதினாவில் பல சத்துக்கள் உள்ளன இதை நாம் உணவின் வாசனைக்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். புதினாவினை உடலில் அதிகமாக சேர்ப்பது மிகவும் நல்லது. எலுமிச்சை நீர்ச்சத்து கொடுத்து உடலில் புத்துணர்ச்சியை அளிக்கும். இந்த இரண்டையும் சேர்த்து ஜூஸ் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

எலுமிச்சை பழத்தில் சாறு எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு புதினா இலையைக் கழுவி ஜூஸ் ஜாரில் போட்டு அத்துடன், உப்பு, தேன் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்பு எடுத்து வைத்துள்ள எலுமிச்சை பழச்சாறு சேர்த்து அதில் தேவையான தண்ணீர் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அடித்து பருகவும். இது கோடைக் காலத்தில் சாப்பிடுவது உடலில் உள்ள சூட்டை குறைத்து உடலுக்கு குளிர்ச்சியை தரும்.
Ingredients
Instructions