யாழில் தேசிக்காயின் விலை உயர்வு(Photos)

யாழில் தேசிக்காயின் விலையிலும் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் யாழ்.மாவட்டத்தின் முக்கிய சந்தையாக கருதப்படும் திருநெல்வேலிச் சந்தையில் முன்னர் 160 ரூபா முதல் 200 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ தேசிக்காய் தற்போது 250 ரூபா வரை அதிகரித்துள்ளது.

இதேவேளை, சந்தைக்குத் தேசிக்காய் வரத்துக் குறைவடைந்தமையே தேசிக்காய் விலை அதிகரிப்புக்குக் காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)