fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

எலுமிச்சை அவல் ரெசிபி

அவல் கொண்டு நிறைய ரெசிபிக்கள் செய்யலாம். அதில் ஒன்று தான் எலுமிச்சை அவல் ரெசிபி. இது மிகவும் ஈஸியான, அதே சமயம் ஆரோக்கியமான காலை உணவும் கூட. மேலும் இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

எலுமிச்சை அவல் ரெசிபி

எலுமிச்சை அவல் ரெசிபி - Lemon Aval Recipe

எலுமிச்சை அவல் ரெசிபி எலுமிச்சை அவல் ரெசிபி Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 250 calories 50 grams fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • எலுமிச்சை - 1
  • பெருங்காயத் தூள் - சிறிதளவு
  • பச்சை மிளகாய் - 1
  • வெங்காயம் - 2
  • வேர்க்கடலை - கால் கப்
  • கடுகு, மஞ்சள் தூள் - சிறிதளவு
  • கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
  • உப்பு – தேவைக்கு

Instructions

அவலை சில நிமிடங்கள் நீரில் ஊறவைத்துக் கொள்ளவும். எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து தனியாக வைக்கவும். கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து தாளிக்கவும். பின்பு வெங்காயம், மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி அதில் வேர்க்கடலையைக் கொட்டி கிளறிவிடவும். பின்னர் அவல், உப்பு சேர்த்து கிளறி வெந்ததும் கீழே இறக்கி எலுமிச்சை சாறை ஊற்றி கிளறி, கொத்தமல்லித் தழையினை தூவி பரிமாறலாம்.

Related posts

நாவில் எச்சில் ஊறவைக்கும் கிரில்டு சிக்கன்!!

N N

சத்து மாவு உருண்டை

N N

உடல் எடையினைக் குறைக்கும் கொள்ளு ரசம்!!

N N